தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் பொருள்களை குடிமக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.

சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்த மாதத்திற்கான குறைதீர் கூட்டம் வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.