இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்கள் அன்றாட வாழ்க்கைக்கு எந்தளவுக்கு அவசியமோ, அதே அளவு அவசியமான தகவலாக ஒருவர் உயிரிழந்த பிறகு அந்த ஆவணங்களை என்ன செய்வது என்ற சந்தேகமும் பலரிடம் உள்ளது. வழக்கமாக ஒரு நபர் மறைந்துவிட்டால் அவரது குடும்பத்தினர் இறப்புச் சான்றிதழைப் பெறுவதோடு அரசு ஆவணங்கள் தொடர்பான நடைமுறைகளையும் கவனிக்க வேண்டியுள்ளது . அந்த வகையில், மிக  முக்கியமான ஆபரணமாகக் கருதப்படும் ஆதாரை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்துப் பலரும் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

குறிப்பாக, ஒருவர் உயிரிழந்த பிறகு அவருக்கான இறப்புச் சான்றிதழைச் முறையாகப் பெற்றுவிட்டாலே அவரது ஆதார் அட்டை அதற்குப் பிறகு தானாகவே செயலிழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால், வங்கி கணக்குகள் மற்றும் நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் பான் கார்டு விஷயத்தில் சில கூடுதல் கவனமும் பொறுப்பும் தேவைப்படுகிறது . இறந்த நபர் வருமான வரி தாக்கல் செய்துவிட்டு அதற்கான ரீஃபண்ட் தொகை எதனுக்காவது காத்திருந்தால், அந்தப் பணம் கைக்கு வரும் வரை அவரது பான் கார்டை மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அனைத்து நிதித் தேவைகளும் முழுமையாக நிறைவடைந்த பிறகு, அந்தப் பான் கார்டை விருப்பத்தின் பேரில் வருமான வரித் துறையிடம் முறையாக ஒப்படைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதால் அவை காலாவதியாகும் போது தானாகவே ரத்தாகிவிடும். இதேபோன்று, உயிரிழந்தவர்களின் பெயர்கள் உரிய ஆவணங்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலிலிருந்தும் முறையாக நீக்கம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.