தமிழக அரசின் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இலவச கையடக்க கணினி வழங்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. நவீன தொழில்நுட்பங்களின் மூலம் அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக 79 ஆயிரத்து 723 கையடக்க கணினிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதன் மூலமாக visual based பாடங்களை சிறார்களுக்கு பயிற்றுவிக்க முடியும் என அரசு தெரிவித்துள்ளது.