தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகவே மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூர் தீரன் சின்னமலை மகளிர் கல்லூரி புதிய கட்டடத்தை காணொளி மூலமாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் அதன் பிறகு பேசும்போது, பெண்கள் உயர்கல்வி கற்க வேண்டும். எனது கனவெல்லாம் தமிழக மாணவ மாணவிகள் உலகமெல்லாம் சென்று சாதிக்க வேண்டும். அதைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.