தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தபால் வாக்கு (Postal Ballot) நடைமுறையில் இந்திய தேர்தல் ஆணையம் மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், புதிதாக 5 துறைகளைத் தபால் வாக்கு பட்டியலில் சேர்த்துள்ளது.

அதன்படி, அரசுப் போக்குவரத்து கழகம், மின்சாரத் துறை, போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் இனி தபால் வாக்கு மூலம் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றலாம் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை அரசு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.