சமூக வலைதளங்களில் ஒரு ரிக்ஷாக்காரரின் வீடியோ தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், அவர் தன்னிடம் பயணம் செய்யும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடம் மிகவும் சரளமாகவும், தெளிவான உச்சரிப்புடனும் ஆங்கிலத்தில் உரையாடுகிறார்.
பொதுவாக ஆங்கிலம் என்பது படித்தவர்கள் மட்டுமே பேசும் மொழி என்ற எண்ணத்தை உடைக்கும் வகையில், பழைய டெல்லியின் சாந்தினி சௌக் பகுதியைச் சுற்றிப் பார்க்கும் தம்பதியினருக்கு அந்த இடத்தின் சிறப்புகளைப் பற்றி மிகத் துல்லியமாக ஆங்கிலத்தில் விளக்குகிறார்.
நகைச்சுவையாகத் தனது ரிக்ஷாவை “ஹெலிகாப்டர்” என்று அழைத்து, சுற்றுலாப் பயணிகள் ஷாப்பிங் செய்ய விரும்பினால் உடனே நிறுத்துவதாகவும் அவர் கூறுகிறார்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ இதுவரை 4 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும், 37 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
ரிக்ஷா ஓட்டுநரின் இந்தத் தன்னம்பிக்கையையும், கம்யூனிகேஷன் திறமையையும் பார்த்த இணையவாசிகள் வியந்து அவரைப் பாராட்டி வருகின்றனர். 2024-ல் முதலில் வைரலான இந்த வீடியோ, தற்போது மீண்டும் பகிரப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
View this post on Instagram
“>
எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தால், மொழி என்பது ஒரு தடையல்ல என்பதை இந்தச் சம்பவம் உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளது.
