தனுசு ராசி அன்பர்களே,

இன்று வெளிவட்டாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரகசியங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். தேசப்பற்றும் தெய்வப்பற்றும் அதிகரித்து காணப்படும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். தாய் வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். எதிர்ப்புகளை சாதுரியமாக வெல்வீர்கள். நிலுவை பணம் ஓரளவு வசூல் ஆகும். மிகவும் வேண்டியவரை பிரியும் சூழல் உள்ளது. காசு பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். மிகவும் நேர்மையாக செயல்படுவீர்கள். வர வேண்டிய பணம் சரியாக வரும். கவலைகளை மறந்து பணிகளில் ஈடுபடுங்கள். இனிய கனவுகள் மேலோங்கும். பெண்கள் இன்று அக்கம் பக்கத்தில் வீண் விரோதங்களை வளர்த்துக் கொள்ள வேண்டாம். யார் மனதையும் புண்படுத்தாத படி பேசுங்கள். ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்படுங்கள். இன்று மாணவர்கள் யோசித்து எடுக்கும் முடிவுகளால் வெற்றி கிடைக்கும். தயவு செய்து குழப்பம் அடைய வேண்டாம். கல்வியில் சாதிக்க முடியும். உயர்கல்வி சிறப்பாக அமையும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: இரண்டு ஐந்து மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்