விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று தனவரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். சொகுசான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல தகவல் வந்து சேரும். இடையூறு செய்தவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் மிதமான அளவு பண வரவு இருக்கும். இன்று தொழில் தொடர்பாக அலைச்சல் ஏற்படலாம். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும் திட்டமிட்டதை விட செலவு கூடுதலாகலாம். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறுவது படி நடந்து கொள்வது நன்மை கொடுக்கும். பெண்கள் இன்று இனிய பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. இன்று மாணவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். காரியங்களில் வெற்றி ஏற்படும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 3, 6 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்