துலாம் ராசி அன்பர்களே,

இன்று புத்துணர்ச்சி பெருகும் நாளாக இருக்கும். புகழ் மிக்கவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுப்பார்கள். தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வார்கள். பண பாக்கிகள் வசூலாகும். கூடுதல் உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வீர்கள். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்ற வேண்டும். காரியத்தடை தாமதம் ஏற்பட்டாலும் சரியாகும். மாற்று கருத்து உடையவர்கள் மனம் மாறுவார்கள். கவனமாக செயல்படுவது மிகவும் நல்லது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டாலும் கண்டிப்பாக சரியாக கூடும். இன்று மாணவர்கள் பொருளாதார விருத்தியை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். லட்சிய நோக்குடன் கல்வி அமைத்துக் கொள்வீர்கள். பெண்களுக்கு இன்று யோகமான நாளாக இருக்கும். சிறந்த செயல்களை செய்து பாராட்டு பெறுவீர்கள். அடுத்தவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்