கன்னி ராசி அன்பர்களே,

இன்று மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி பெறும் நாளாக இருக்கும். பங்குதாரர்களுடன் ஏற்பட்ட பகை மாறும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வியாபார வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்திகள் வரும். இன்று மிகவும் நியாயமாக நடந்து கொள்வீர்கள். நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்வது நல்லது. அரசு விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படும். புத்தி சாதுரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். பெண்கள் ஆசைப்பட்ட பொருளை வாங்கி மகிழ்வீர்கள். குறிக்கோளுடன் செயல்படுவீர்கள். இன்று மாணவர்கள் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்