சிம்மம் ராசி அன்பர்களே,

தயவு செய்து மனப்பதட்டம் கொள்ள வேண்டாம். செய்யும் செயலை நிதானமாக செய்ய பாருங்கள். கருத்துக்களை பரிமாறும் போது கவனம் தேவை. யாரிடமும் கோபப்பட வேண்டாம். உங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு செல்லுங்கள். இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி பெறுவீர்கள். தன வரவு திருப்தியை ஏற்படுத்திக் கொடுக்கும். பொது காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறும் சூழல் உள்ளது. தடைகள் விலகி செல்லும். வீடு மாற்றங்கள் விரும்பத்தக்க விதத்தில் அமையும். தொழில் வியாபாரம் செழிக்கும். தேவையான பண வரவு சீராக கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பெண்கள் இன்று மன அமைதியை ஏற்படுத்திக் கொள்வீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். முன் யோசனையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். இன்று மாணவர்கள் திறமையால் வெற்றி பெற முடியும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். சிந்தனையை ஒருநிலைப்படுத்துவது நல்லது. இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: ஆறு ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்