கடகம் ராசி அன்பர்களே,

இந்த நாள் பொது ஈடுபாடு அதிகரிக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லும் சூழல் உள்ளது. தொழில் முன்னேற்றத்திற்கு தொலைபேசி வழி தகவல் உறுதுணையாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உருவாகும். சராசரியான அளவில் பண வரவு ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தடைகள் விலகும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். தொட்ட குறை விட்ட குறை எல்லாம் சரியாகும். குலதெய்வ வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பெண்கள் இன்று ஓய்வாக காணப்படுவீர்கள். அனைத்து பணிகளையும் சீக்கிரமாக முடித்து காட்டுவீர்கள். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று மாணவர்கள் திறமையால் வெற்றி பெற முடியும். கல்வி மீது முழு அக்கறை கொள்ள வேண்டும். படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்