மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று செய்யும் பணிகளை விரைந்து செய்து முடிப்பீர்கள். பதவியில் உள்ளவரின் உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். வருமானம் சீராக உயரும். பயணங்களால் நல்ல பலன் ஏற்படும். பக்க பலமாக இருந்த நண்பர்கள் காரியங்களை முடித்துக் கொடுப்பார்கள். பொது வாழ்க்கையில் உங்களுக்கு புகழ் கூடும். இடையூறுகள் விலகி நன்மை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய வளர்ச்சி ஏற்படும். தொலைந்து போன பொருள் மீண்டும் கிடைக்கும். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். பெண்கள் ஆசைப்பட்ட பொருளை வாங்க முடியும். நியாயமாக நடந்து கொள்வீர்கள். யோகமான நல்ல பலன் ஏற்படும். வெற்றி மீது வெற்றி வரும். இன்று மாணவர்கள் சோதனைகளை சாதனைகளாக மாற்ற முடியும். கல்வி மீது முழு அக்கறை கொள்ள முடியும். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: நான்கு ஐந்து மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்