டெல்லி ஜாகிரா என்ற பகுதியில் சரக்கு ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. டெல்லியில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்ட இடத்துக்கு தீயணைப்பு, மீட்பு குழுவினர் விரைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. சரக்கு ரயில் என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.