மகாராஷ்டிரா மாநிலம் ஷாப்பூர் பகுதியில் நிறுவப்பட்டுள்ள ஒரு வித்தியாசமான சிகரெட் வெண்டிங் மெஷின் (Vending Machine) இப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. கணேஷ் ஜாதவ் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த இயந்திரத்தில், நாம் கடையில் வாங்குவது போலவே ஒற்றை சிகரெட் அல்லது முழு பாக்கெட்டையும் யூபிஐ (UPI) மூலம் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

இந்த விசித்திரமான யோசனைக்கு பின்னால் ஒரு உருக்கமான காரணத்தையும் அவர் கூறியுள்ளார். அவரது கிராமத்தில் இரவு 10 மணிக்கு மேல் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு விடுமாம்.

 

View this post on Instagram

 

A post shared by 🖤🥀 (@aditya_gajare_)

இதனால் சிகரெட் தேடி இளைஞர்கள் 5 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க வேண்டியுள்ளது. ஒருமுறை சிகரெட் வாங்கச் சென்ற போது நடந்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கவே இந்த இயந்திரத்தை உருவாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். புகைபிடிப்பது தனிப்பட்ட விருப்பம் என்றும், இயந்திரத்தில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினாலும், இது இளைஞர்களைப் புகைபிடிக்கத் தூண்டும் என ஒரு தரப்பினர் கவலை தெரிவித்துள்ளனர். தற்சமயம் இது ஒரு பரிசோதனை முயற்சியாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.