பெங்களூருவைச் சேர்ந்த பங்கஜ் என்ற மென்பொருள் பொறியாளர், பொது இடங்களில் புகைபிடிப்பவர்களைக் கையாளுவதற்கு ஒரு வித்தியாசமான ‘ஏஐ’ (AI) கருவியைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். பொது இடங்களில் புகைபிடிப்பது தனக்கு எரிச்சலைத் தருவதாகக் குறிப்பிட்ட அவர், இதற்காக ஒரு சிறிய கேமரா மற்றும் ஸ்பீக்கர் அடங்கிய கருவியை உருவாக்கியுள்ளார்.
இந்த கருவி யாராவது புகைபிடிப்பதைக் கண்டறிந்தால், உடனடியாக ஒரு குழந்தை இருமுவது போன்ற சத்தத்தையும், தொடர்ந்து ஒரு பாட்டி அந்த நபரைத் திட்டுவது போன்ற ஆடியோவையும் ஒலிக்கச் செய்யும். குறிப்பாக அந்தந்த ஊர் மொழியிலேயே (Local Language) இந்தத் திட்டு விழும்படி அவர் செட் செய்துள்ளார்.
i HATE people smoking around me in public. so i built a device that plays audio of a baby coughing and granny abusing in local language whenever it detects someone smoking nearby 🤬
it does person detection, spots cigarette in hand, and detects smoking gesture. all in realtime.… pic.twitter.com/t2I93HnOj6
— Pankaj (@the2ndfloorguy) February 11, 2026
சமீபத்தில் பேருந்து நிலையம் ஒன்றில் அவர் இதைச் சோதனை செய்தபோது, ஒரு நபர் சிகரெட் பிடிப்பதை உணர்ந்த இந்த கருவி பாட்டி குரலில் திட்டத் தொடங்கியுள்ளது. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், யாரோ நேரில் திட்டுவதாக நினைத்து குழப்பத்தில் தனது சிகரெட்டை அணைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துள்ளார்.
முன்னதாக, திருமண விசேஷங்களில் என்ன சாப்பிடலாம் என்று பிளான் போட்டுத்தரும் ‘BuffetGPT’ என்ற கருவியை உருவாக்கி இவர் வைரலானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ‘ஆன்டி-ஸ்மோக்கிங்’ கருவியைப் போர்ட்டபிள் வடிவில் (Portable) கொண்டுவர பங்கஜ் திட்டமிட்டுள்ளார்.
