இன்றைய டிஜிட்டல் உலகில் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் முற்றிலும் மாறிவிட்டன. வேலைக்கோ, வியாபாரத்திற்கோ சென்றால் தான் வருமானம் என்ற நிலையை மாற்றி, தங்களது பொழுதுபோக்கு மற்றும் அன்றாட பழக்கவழக்கங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கோடீஸ்வரர்களாக மாறும் ‘இன்ஃப்ளூயன்ஸர்கள்’ பெருகி வருகின்றனர். அந்த வரிசையில், கனடாவைச் சேர்ந்த 32 வயது மாடல் லூயிசா கோவான்ஸ்கியின் கதை தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
கனடாவின் டொராண்டோ நகரைச் சேர்ந்த லூயிசாவுக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். பொதுவாக மாடல்கள் மேக்கப் மற்றும் நவநாகரீக ஆடைகளுடன் வலம் வருவதைத்தான் மக்கள் விரும்புவார்கள். ஆனால், லூயிசா ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி செய்து வியர்வை சிந்துவதைப் பார்க்கவே அவரது ரசிகர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்யத் தயாராக உள்ளனர். அவரது ஒரு ஜிம் வீடியோவைப் பார்க்க சில ரசிகர்கள் சுமார் 1.10 லட்சம் ரூபாய் (1,000 பவுண்டுகள்) வரை கூட வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
தனது ஃபிட்னஸ் பயணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் லூயிசா முதலில் வீடியோக்களை பதிவிடத் தொடங்கினார். ஆனால், மேக்கப் இல்லாத அவரது இயல்பான உழைப்பைக் கண்ட ரசிகர்கள் அவரிடம் ஈர்க்கப்பட்டனர். இதுவே அவருக்கு மாடலிங்கை விட அதிக வருமானத்தை ஈட்டித் தரும் ஒரு தொழிலாக மாறியுள்ளது. “இன்றைய ‘கிரியேட்டர் எகனாமி சாதாரண மக்களுக்கும் பெரிய அங்கீகாரத்தையும் வருமானத்தையும் பெற்றுத் தருகிறது” என அவர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
இருப்பினும், இந்த வருமானம் நின்று போனாலும் தான் ஜிம் செல்வதை நிறுத்தப்போவதில்லை என லூயிசா உறுதியாகத் தெரிவிக்கிறார். “உடற்பயிற்சி என்பது எனக்கு மன அமைதியைத் தரும் ஒரு விஷயம். இது எனது வாழ்க்கை முறையின் ஒரு அங்கம். பணத்திற்காக மட்டுமே நான் இதைச் செய்யவில்லை” என அவர் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்கள் மூலம் வெறும் பொழுதுபோக்காகத் தொடங்கிய ஒரு விஷயம், இன்று ஒரு பெண்ணின் வாழ்க்கையையே மாற்றி அமைத்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
