அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் (OPS) அணியினர், மீண்டும் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமைக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சேலத்தில் ஒரு பெரிய ட்விஸ்ட் நடந்துள்ளது.

ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளரும், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளருமான பெரியசாமி தலைமையில், சுமார் 250 நிர்வாகிகள் இன்று திமுகவில் இணைந்துள்ளனர்.

சேலம் ஆத்தூரில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில், அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் இவர்கள் அனைவரும் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிதறிவிடக் கூடாது என்பதற்காக அவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயன்று வந்தார்.

ஆனால், அவரது சொந்த மாவட்டத்திலேயே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆளுங்கட்சியான திமுகவை நோக்கிச் சென்றது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.