கரூர் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மீது அவரது முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கரூரில் நடந்த அசம்பாவிதங்களுக்கு விஜய்தான் முழு பொறுப்பு என்று கூறியுள்ள அவர், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் விஜய் கையில் கைவிலங்கு பூட்டப்பட்டு கைதாகி இருப்பார்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் அவர்கள் விஜய் மீது காட்டும் தேவையற்ற கரிசனம்தான், அவர் சுதந்திரமாக இருக்கக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், சினிமாவில் விஜய் பேசும் பஞ்ச் வசனங்களைப் பற்றியும் அவர் ஒரு போடு போட்டுள்ளார். “திரைப்படங்களில் விஜய் பேசும் அடுக்குமொழி வசனங்கள் எல்லாம் அரசியலில் ஒருபோதும் எடுபடாது” என்று சாடியுள்ள பி.டி.செல்வகுமார், திரையில் கைதட்டல் வாங்குவது வேறு, களத்தில் அரசியல் செய்வது வேறு என விஜய்க்கு நேரடி அட்டாக் கொடுத்துள்ளார். விஜய்யோடு பல ஆண்டுகள் நெருக்கமாக இருந்த ஒருவரே, “ஜெயலலிதா இருந்தா விஜய் ஜெயில்ல இருந்திருப்பார்” எனப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
