சென்னையில் நேற்று (ஜனவரி 30, 2026) நடைபெற்ற ஒரு தனியார் ஊடக விவாத நிகழ்ச்சியில் எச். ராஜா பங்கேற்றார். விறுவிறுப்பாக விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அவர் திடீரென நிலைதடுமாறி மேடையிலேயே மயங்கி விழுந்தார்.

அவர் மயங்கியதும், மேடையில் இருந்தவர்கள் அவரைத் தாங்கிப் பிடித்தனர். அங்கிருந்த முன்னாள் ஆளுநரும் மருத்துவருமான தமிழிசை சௌந்தரராஜன் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்தார்.

பின்னர் அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இன்று அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எச். ராஜாவுக்கு பக்கவாதம் (Stroke) பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், உறவினர்களுடன் பேசக்கூடிய நிலையில் உடல்நலம் முன்னேறி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.