ஆப் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட வாடகை காரில் ஏறிய பெண் பயணிக்கும், டிரைவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. காரில் ஏறியவுடன் பாதுகாப்பு கருதி ‘சீட் பெல்ட்’ அணியுமாறு டிரைவர் கனிவுடன் கேட்டுக்கொண்டார். ஆனால், அதற்கு ஒத்துழைக்காத அந்த பெண், “நான் அணிந்து கொள்கிறேன், நீங்கள் வண்டியை எடுங்கள்” என அலட்சியமாக பதிலளித்துள்ளார். போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதிக்கப்படும் என்பதால், பெல்ட் அணியாமல் வண்டியை எடுக்க முடியாது என டிரைவர் உறுதியாகக் கூறியது அந்த பெண்ணை ஆத்திரமடையச் செய்தது.

“உனக்கு ஆங்கிலம் தெரியும் என்று பந்தா காட்டாதே, நீ வெறும் கார் டிரைவர் தான்” என ஒருமையில் பேசியதோடு, டிரைவர் ஏளனமாக சிரிப்பதாகவும், பயத்தில் நடுங்குவதாகவும் கூறி அடுக்கடுக்கான புகார்களைக் கூறி ரகளையில் ஈடுபட்டார். டிரைவர் அமைதியாக “விருப்பமில்லை என்றால் பயணத்தை ரத்து செய்துவிடுங்கள்” எனக் கூறியதையடுத்து, அந்த பெண்கள் காரை விட்டு இறங்கிச் சென்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சேவைத் துறையில் இருப்பவர்களை மரியாதையின்றி நடத்துவது கண்டிக்கத்தக்கது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.