பீகாரில் போலீஸாரை ஏமாற்றிவிட்டு ஓடிய கைதி ஒருவர், தப்பிக்க வழியில்லாமல் சாக்கடை கால்வாய்க்குள் புகுந்து ஒளிந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்பங்கா பகுதியில் திருட்டு வழக்கில் கைதான இப்திகார் அகமது என்பவரை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் மின்னல் வேகத்தில் தப்பி ஓடி அருகில் இருந்த பாதாளச் சாக்கடைக்குள் புகுந்தார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளியே வராமல் அடம் பிடித்த கைதியை, போலீஸார் லாவகமாகப் பேசி சமாதானப்படுத்தி மீட்டனர். இந்த சினிமா பாணி சேஸிங் மற்றும் கைதி சாக்கடையில் ஒளிந்திருக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.