டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையின் போது, இந்திய ராணுவ வீரர்கள் ‘கிரிஷ் 3’ திரைப்படத்தின் “தில் நா தியா” பாடலுக்கு மிகச்சரியான தாளத்துடன் அணிவகுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
ராணுவ வீரர்களின் ஒவ்வொரு அடியும், கைகளின் அசைவும் அந்தப் பாடலின் வேகத்திற்கு ஏற்ப கச்சிதமாக பொருந்திப் போவது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
<a href=”http://
“दिल ना दिया… दिल ना लिया… बोलो न बोलो न क्या किया…”
दुनिया भर के सैन्य तनावों के बीच दिल्ली से भारत के सैनिकों का एक कूल वीडियो… गणतंत्र दिवस परेड के अभ्यास के दौरान एक गाने पर क़दमताल करते जवान pic.twitter.com/D2hXnMI73D
— Umashankar Singh उमाशंकर सिंह (@umashankarsingh) January 20, 2026
“>
வழக்கமான கம்பீரமான ராணுவ இசைக்கு பதிலாக, துள்ளலான பாலிவுட் பாடலுக்கு அவர்கள் நடைபோடும் இந்த வித்யாசமான காட்சி சமூக வலைதளங்களில் “இணையத்தின் மிகச்சிறந்த வீடியோ” எனப் புகழப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், ஹிருத்திக் ரோஷனின் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தையும், இணையத்தில் பிரபலமான “கிரிஷ் கா கானா சுனேகா?” என்ற மீம்ஸையும் இணைத்து ஜாலியாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ராணுவ வீரர்களின் இந்த உற்சாகமான மற்றும் ஸ்டைலான அணிவகுப்பு, கடுமையான பயிற்சியிலும் ஒரு ஜாலியான பக்கம் இருப்பதை வெளிப்படுத்துவதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக அந்தப் பாடலின் தாளத்திற்கு ஏற்ப வீரர்களின் காலணிகள் தரையில் படும் சத்தம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
மறுபுறம், இந்த ஆண்டு குடியரசு தின விழாவிற்காக இந்திய கடற்படையும் தீவிரமாகத் தயாராகி வருகிறது.
ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்காலக் கப்பல் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போன்ற நவீன போர் கப்பல்களின் மாதிரிகள் அணிவகுப்பில் இடம்பெறவுள்ளன.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சராசரியாக 25 வயதுடைய 144 இளம் கடற்படை வீரர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர். இதற்காக அவர்கள் கடந்த இரண்டு மாதங்களாகக் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
