விருதுநகர் மாவட்டம் விளாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு ஆலை என்பது செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இன்று பணியில் ஈடுபட்டுள்ளனர்.. அப்போது பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வின் காரணமாக பட்டாசு விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

இதில் 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு சிலர் காயமடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து பட்டாசு வெடிப்பதன் காரணமாக தீயை அணைப்பதில் சிரமங்கள் இருப்பதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.. ஜனவரி மாதம் முதல் தற்போது வரை விருதுநகர் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை விபத்து  நடந்துள்ளது. இதில் சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்..

பட்டாசு ஆலைகள் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் பட்டாசு விதிமுறை மீறல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக உரிமம் ஒருவர் பெயரில் எடுத்து மற்றவருக்கு லீஸ் முறையில் விடப்படுவதாகவும், இதனால் பெரும் விபத்து நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பட்டாசு ஆலைகளில்  முறையாக விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளது..