விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விளாம்பட்டியில் உள்ள பட்டாசு அலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.