குடியிருப்புப் பகுதியில் ஒரு சிகப்பு நிற காரின் மீது கல் எறிந்த சிறுவர்களை, அந்தக் கார் ஓட்டுநர் ஆத்திரத்துடன் துரத்திச் சென்று மோதும் பதற்றமான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. கார் மோதிய வேகத்தில், அந்தச் சிறுவர்கள் ஒவ்வொருவராக நிலைதடுமாறித் தரையில் விழுகின்றனர். தன்னுடனிருந்தவர்கள் காரில் அடிபட்டுத் தரையில் விழுவதைக் கண்டும் அஞ்சாத ஒரு சிறுமி, மீண்டும் ஒரு கல்லை எடுத்து அந்தக் காரை நோக்கி வீசத் தயாராக நிற்பது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
It's the little girl still ready to throw another rock after her cousins got knocked🥴🥴 pic.twitter.com/ZIONANSFkZ
— 𝐁𝐫𝐚𝐱𝐭𝐨𝐧 👑 (@Primewave96) December 28, 2025
இந்தக் காணொளி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் அந்தச் சிறுமியின் பிடிவாதத்தையும் தைரியத்தையும் கண்டு வியக்கின்றனர். தன் கண்முன்னே கார் மோதி மற்றவர்கள் கீழே விழுந்த போதிலும், சற்றும் பின்வாங்காமல் “இப்பவும் நான் கல்லை வீசுவேன்” என்று ஆக்ரோஷமாக நிற்கும் அந்தச் சிறுமியின் செயல், வேடிக்கையாகவும் அதேசமயம் அதிர்ச்சியாகவும் இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
