தமிழகத்தில் எரிசக்தி சேமிப்பின் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் மின் சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும் மத்திய சென்னை பகுதிக்கு உட்பட்ட மின் சேமிப்பில் ஈடுபட்டுள்ள அரசு துறை அலுவலகங்களுக்கு சிறந்த எரிசக்தி சேமிப்புக்கான விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய சென்னைக்கு உட்பட்ட சென்னை நீதிமன்றம் தலைமைச் செயலகம் ராஜீவ் காந்தி மருத்துவமனை ராயப்பேட்டை மருத்துவமனை ஓமந்தூரார் மருத்துவமனை, கிங் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் வாரியம், காவல் துறை ஆணையா் அலுவலகம், தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம், பள்ளிக் கல்வித் துறை அலுவலகம், வணிக வரித் துறை அலுவலகம், தமிழ்நாடு தகவல், ஆணையம் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகிய அரசு அலுவலகங்களில் மின் ஆற்றல் தணிக்கைக்கு முன்பும் பின்பும் என் பயனீட்டு அளவை கணக்கிட்டு அதற்கான உரிய ஆவணங்களுடன் சென்னை தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவின் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

இதில் அதிக அளவு மின்சாரத்தை சேமித்த மின் பயனீட்டாளர் சிறந்த எரிசக்தி சேமிப்புக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.