சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. இளநிலை, முதுநிலை, எம்சிஏ மற்றும் எம்பிஏ உள்ளிட்ட தொலைதூரப் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை நடைபெற்றது. இந்த தேர்வுக்கான ரிசல்ட் இன்று மாலை 6 மணிக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்திய தேர்வு முடிவுகளை காணலாம்.