சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களும் பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி கூட்டாளர்களும், பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை உள்ள பி டெக் மாணவர்களுக்கு 100% நிதி உதவி இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் மாணவர்களுக்காக அழைத்து வரும் நிதி உதவி மற்றும் கல்வி உதவித்தொகை ஆதரவுகளில் மெரிட் கம் மீன்ஸ் உதவித்தொகையும் ஒன்று. எஸ்சி எஸ்டி மாணவர்கள் எந்த பாடப்பிரிவில் சேர்ந்தாலும் அவர்களின் பெற்றோரின் வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அளித்து வரும் மூன்றில் ஒரு பங்கு கல்வி கட்டண தள்ளுபடி எம் சி எம் கல்வி உதவித் தொகையும் சேர்த்து வழங்கப்படுவதால் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த தகுதி உள்ள பி டெக் மற்றும் இரட்டைப் பட்ட மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்துவதில் முழு விலக்கு பெறுவர். பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் முழு கல்வி கட்டணம் விலக்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.