திமுக முன்னாள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் இல்லம் மற்றும் அவருக்குத் தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்குள் செல்ல முயன்ற திமுக வழக்கறிஞர் சரவணனை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக ‘அறப்போர் இயக்கம்’ அளித்த புகாரின் அடிப்படையில், எ.வ.வேலு உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சோதனை தீவிரமாக நடைபெற்று வந்த சூழலில், அங்கு வந்த திமுக வழக்கறிஞர் சரவணன், “சார், நான் வழக்கறிஞர் வந்திருக்கிறேன், உள்ளே விடுங்கள்” என்று நுழைவாயிலில் இருந்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்; ஆனால், “இப்போது உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது” என்று கூறி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரைத் திருப்பி அனுப்பிய நிலையில், அவர் கதவு வழியே வீட்டிற்குள் என்ன நடக்கிறது என்று உற்று நோக்கியவாறு நின்று திரும்ப சென்றார்.
“சார் வழக்கறிஞர் வந்து இருக்கேன் உள்ளே விடுங்க..! இப்போ உள்ள விட முடியாதுங்க சார்..?”
எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடைபெற்று வரும் நிலையில் கதவு வழியே உற்று நோக்கிய தி.மு.க வழக்கறிஞர் சரவணன்..#DMK | #EVVelu | #Chennai | #PolimerNews pic.twitter.com/5rXWVD3Xd1
— Polimer News (@polimernews) June 25, 2026
“>
