தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் நடிகர் அஜித்குமார். இவர் தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவர். 90-ஸ் கிட்ஸ் களில் மனதை கவர்ந்த காதல் மன்னனாக திகழ்ந்தவர் நடிகர் அஜித் குமார். ஒரு பக்கம் சினிமா மற்றெரு பக்கம் கார் பந்தய ரேஸ் என தனக்குப் பிடித்ததை விரும்பி செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் gt4 என்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்று வருகிறார். இதனால் ஐரோப்பாவில் உள்ள அஜித் ரசிகர்கள் அவரது கார் ரேஸை காண்பதற்காக சென்றுள்ளனர். இந்த நிலையில் போட்டிக்கு இடையில் அஜித்குமாரை தனது ரசிகர் ஒருவரை சந்தித்துள்ளார்.
அப்போது அவருடன் பேசிய ரசிகர் ஒருவர், ‘நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்’ என கேட்டுள்ளார். அதற்கு நடிகர் அஜித்குமார் ‘சரி சொல்லுங்கள்’ என கூறியுள்ளார். அப்போது அவர் அஜித் குமாரிடம், “நான் உங்களது தீவிர ரசிகன். சிறுவயதில் உங்களுக்காக பல சண்டைகள் போட்டுருக்கிறேன்.
நான் சிறுவயதில் இருக்கும்போது நண்பர்களுடன் விஜய்யா? அஜித்தா?என போட்டி வரும்போதெல்லாம் நான் உங்கள் பக்கம் தான் நின்றேன்.என் ஏரியாவில் உங்களுக்காகவே பெரிய ரசிகர் படையும் உள்ளது” என கூறியுள்ளார். இதனைக் கேட்டு அஜித்குமார் ரசிகர் பேசுவதை பார்த்து வியந்துள்ளார்.
பின்பு அவரிடம் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து அந்த ரசிகர் அஜித்குமாரிடம் பேசிக்கொண்டே அவரை கட்டி அணைத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதற்கு பல சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அதில் சிலர் கூறியதாவது, நடிகர் அஜித்குமார் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் ரசிகர்களை மதிப்பதில் சிறந்த மனிதர் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
