தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் ‘மாநகரம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து கைதி, லியோ, விக்ரம் போன்ற படங்களை இயக்கியதன் மூலமாக தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இவர்.
இந்த நிலையில் இவர் சினிமாடிக் யுனிவர்ஸ் என்ற கான்செப்டை தொடங்கி அதன் கீழே பல படங்களை இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து பென்ஸ், கைதி 2, ரோலக்ஸ் போன்ற படங்களை எல்.சி.யு -வின் கீழ் இயக்க உள்ளார். இதுகுறித்து லோகேஷ் கனகராஜின் கூறுகையில், ‘இந்த கான்செப்ட்டில் புதிதாக ஒரு நடிகைக்கான கதை இணைய உள்ளது.’
“நான் ஒரு நடிகைக்காக கதை எழுதுகிறேன். அது எல். சி. யு.வில் புதிய கதாபாத்திரமாக இருக்கும். கைதி 2-ல் 2,3 புதிய கதாபாத்திரங்கள் இருக்கும்” என கூறினார். இதற்கு முன்பு அனுஷ்கா ஷெட்டி கைதி 2-வில் இணைய உள்ளதாக ஒரு தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்களை வைத்து லோகேஷ் ‘கூலி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதில் நாகார்ஜுனா, சவுபின், சாஹிர், உபேந்திரா, சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி திரையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
