அ.தி.மு.க-வை மீட்டெடுக்கவும், வரப்போகும் தேர்தலைச் சந்திக்கவும் தான் மீண்டும் கட்சியில் இணையத் தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாகவே ‘கிரீன் சிக்னல்’ காட்டியிருந்தார். “நான் ரெடி, ஆனா டி.டி.வி தினகரனும், அவரோட அருமை அண்ணன் எடப்பாடியும் ரெடியா?” என்று ஒரு சவாலையும் முன்வைத்திருந்தார். டி.டி.வி தினகரன் எடப்பாடியுடன் சமாதானம் ஆகிவிட்டதால், அவர் மூலமாகத் தூது அனுப்பி மீண்டும் கட்சிக்குள் நுழைந்துவிடலாம் என்பது ஓ.பி.எஸ்-ஸின் மாஸ்டர் பிளானாக இருந்தது.

​ஆனால், இந்தத் திட்டத்திற்குச் சேலத்தில் வைத்து எடப்பாடி பழனிசாமி மிகக் கறாராக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். “பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி, ஓ.பி.எஸ்-ஸை மீண்டும் கட்சியில் சேர்க்க எந்த வாய்ப்பும் இல்லை” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். தினகரன் வந்து பேசினாலும் சரி, யார் சொன்னாலும் சரி, ஓ.பி.எஸ்-ஸுக்கு அ.தி.மு.க-வில் இடமில்லை என்பதை அவர் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளார். இதனால், ஓ.பி.எஸ் இப்போது அ.தி.மு.க கூட்டணியில் கூட இணைய முடியாத ஒரு இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.