தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உலகம் முழுவதும் கொண்டுள்ளார். இவர் நடிப்பையும் தாண்டி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வது, துப்பாக்கி சுடுதல் மற்றும் கார் ரேஸ் என அனைத்திலும் கலந்து கொண்டு வருகிறார்.

பொதுவாகவே இவர் பைக் ரைடு செல்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். துணிவு படப்பிடிப்பிற்கு இடையே இமயமலை பகுதிக்கு பைக் ரைட் சென்று இருந்தார். இந்நிலையில் அஜித் நேபாளத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் அங்கே தான் தங்கியிருந்த ஹோட்டலில் சமையல் கலைஞராக மாறி அவரே சமையல் செய்துள்ளார். அது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.