தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டது. இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக மாறும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சென்னை அருகே பனையூரில் உள்ள தனது இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மக்கள் இயக்கம் கொண்டு வந்த ‘விலை இல்லா விருந்து திட்டம்’ மூலம் ஏழை மக்களுக்கு தினந்தோறும் இலவசமாக உணவு வழங்கிய 300க்கும் மேற்பட்ட ரசிகர்களை அழைத்து நடிகர் விஜய் இன்று பாராட்டியுள்ளார்.  இந்த மீட்டிங்கில், தொடர்ந்து இதை செய்யுங்கள், இதேபோல் அடுத்தடுத்து பல திட்டங்களை கொண்டு வர உள்ளோம். பண உதவி தேவைப்பட்டால், தன்னிடம் கேளுங்கள், தருகிறேன் என உறுதியளித்துள்ளார்.