சந்திரமுகி முதல் பாகத்தின் வெற்றியை அடுத்து 17 ஆண்டுகளுக்கு பின், இப்படத்தின் 2-ஆம் பாகம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை பி.வாசு டைரக்டு செய்ய ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் கங்கனா ரனாவத் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் வடிவேலு உட்பட பல்வேறு திரைப்பிரபலங்கள் நடிக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் சூட்டிங் குறித்த புகைப்படங்களை அவ்வபோது சமூகவலைதளங்களில் படக்குழு வெளியிட்டு வந்தது. அதன்பின் இப்படத்தின் சூட்டிங் அண்மையில் நிறைவுற்றது. இந்நிலையில் சந்திரமுகி-2 படத்தின் புது அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருக்கிறது.