உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” படம் இன்று ஜூன் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உட்பட பலர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான மாமன்னன் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் மாமன்னன் திரைப்படத்தை பார்த்துவிட்டு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்தார். அதாவது “அமைச்சராக இருந்து கொண்டு படங்களில் நடிக்க கூடாது என்பது சட்டம் கிடையாது. ஆகவே உதயநிதி தொடர்ந்து படங்களில் நடிக்கவேண்டும். மாமன்னன் தான் கடைசி படம் என்று உதயநிதி கூறி இருந்த நிலையில், அவர் இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாமன்னன் படம் பல்வேறு தடைகளை தாண்டி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.