உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” படம் இன்று ஜூன் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உட்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் “மாமன்னன்” பார்த்த பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் பேட்டி அளித்ததாவது “இந்த படம் ரிலீஸ் ஆனதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

மக்களின் கருத்துக்களை தெரிந்துக்கொள்ள நான் ஆர்வமாக இருக்கிறேன். சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை தமிழக மக்கள் எப்போதும் ஏற்றுக்கொள்வார்கள். அதுபோல் மாமனன் படத்தையும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். என் சினிமா வாழ்வில் மிக முக்கியமான படம் மாமன்னன்” என்று அவர் தெரிவித்துள்ளார்