இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி நடித்து கடைசியாக ரிலீஸ் ஆன படம் “பிச்சைக்காரன் 2”. இந்த படத்தை அடுத்து அவர் நடித்த சில படங்களின் சூட்டிங் முடிவடைந்தும் ரிலீஸில் தாமதமாகி வருகிறது. இப்போது அவரது நடிப்பில் “கொலை” படம் ரிலீஸாக தயாராகி இருக்கிறது. டைரக்டர் பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

இன்பைனட் பிலிம்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டே நிறைவு பெற்றது. இந்நிலையில் கொலை படம் வருகிற ஜூலை 21-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே படம் தெலுங்கில் ஹட்யா எனும் தலைப்பில் அன்றைய தினமே வெளியாகிறது.