அருண் மாதேஸ்வரன் டைரக்டில் தனுஷ் நடிப்பில் உருவாகும் படம் “கேப்டன் மில்லர்”. இப்படத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட், ஜெயபிரகாஷ் உட்பட பல்வேறு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பொல்லாதவன் பட வில்லன் டேனியல் பாலாஜி நடிப்பதாக தகவல் வெளியானது. பின் இவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. எனினும் சூட்டிங்கின்போது கால்ஷீட் பிரச்சினையால் டேனியல் பாலாஜி இப்படத்தை விட்டு வெளியேறி உள்ளார்.