துணிவு திரைப்படத்தை அடுத்து தல அஜித்தின் புது படம் உடனே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அப்படத்திலிருந்து விலகினார். அதன்பின் அஜித்தின் படத்தை மகிழ்திருமேனி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு “விடாமுயற்சி” என பெயரிட்டு கதை திரைக்கதை எழுதும் பணிகளில் தீவிரமடைந்தனர். லைகா நிறுவனம் தயாரிக்கக்கூடிய இந்த படத்தில் அஜித்துடன் மீண்டும் த்ரிஷா இணைந்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் ஜூலை மாதம் இறுதியில் தொடங்க உள்ளதாக லைகா நிறுவன வட்டாரங்களில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் நவம்பர் மாதத்துக்குள் தனக்கான காட்சிகள் அனைத்திலும் நடித்து முடித்து விட்டு 2-ஆம் கட்ட உலக பைக் சுற்றுலாவை தொடங்குவதற்கு அஜித் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.