முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அதிமுகவிலிருந்து விலகி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக தனது எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா செய்த அவர், உடனடியாக அண்ணா அறிவாலயம் சென்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த முடிவானது அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள சசிகலா, வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று வேதனை தெரிவித்துள்ளார்.
அதிமுகவை தாய் கழகமாக கருதாமல், ஒரு ‘தீய கழகத்தில்’ அவர் இணைந்துள்ளதாக விமர்சித்துள்ள சசிகலா, ஒரு சிலரின் சுயநலத்தால் தான் இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத் தேவையான புதிய வியூகங்களை தான் வகுத்து வருவதாகவும் அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
