சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை இரண்டு முறை உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1720 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,13,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15,941 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,23,928 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 340 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 3,40,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.