உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை கனடாவைச் சேர்ந்த ஆர்ட்டன் கேப்பிடல் என்ற சர்வதேச நிறுவனம் நேற்று வெளியிட்டது. ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணிக்க முடியும் என்ற அணுகலைக் கொண்டு இந்தத் தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ.) முதலிடம் பிடித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 179 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய அணுகலைப் பெற்றுள்ளனர். இதன் மூலம், ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து 7-வது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் 2-வது இடத்தைப் பிடித்துள்ளன. விசா நெறிமுறைகளைக் கட்டுப்படுத்தியதன் காரணமாக, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் இந்தத் தரவரிசையில் சரிவைச் சந்தித்துள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 67-வது இடம் கிடைத்துள்ளது. அண்டை நாடான இலங்கை 84-வது இடத்திலும், பாகிஸ்தான் 91-வது இடத்திலும் நீடிக்கின்றன.