விஜய் ஆண்டனி நடித்த “பிச்சைக்காரன்” திரைப்படத்தின் வெற்றியை அடித்து இப்பொது “பிச்சைக்காரன் 2” படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமின்றி இயக்கியும் இருக்கிறார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உட்பட பலர் நடித்து உள்ளனர்.

இந்த படம் வரும் மே 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் “பிச்சைக்காரன் 2” திரைப்படத்தின் 2-வது ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதில் பிச்சைக்காரனாக நடிக்கும் யோகிபாபு க்யூஆர் கோடு மூலம் பிச்சை எடுக்கும் காட்சியானது ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.