திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறி, தவெக அரசுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், தனக்கு நடந்த மிகக் கொடூரமான அரசியல் அவமதிப்புகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மேடையில் உடைத்துப் பேசியுள்ளது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. கூட்டணியை உடைத்த சூட்டோடு, கடந்த சில தினங்களாகத் திமுக மேலிடத்தால் தனக்கு நேர்ந்த மன உளைச்சல்களைப் பொதுக்கூட்டம் ஒன்றில் வைகோ மிக உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
அவர் பேசுகையில், “வெறும் இரண்டு நாட்களுக்கு முன்னாடி ஒரு கல்யாண விசேஷத்துல நான் மு.க.ஸ்டாலினை நேர்ல சந்தித்தேன். நான் உட்கார்ந்திருந்த சோபாவில என் பக்கத்துல நல்லாவே இடம் இருந்தும், அவர் என் அருகில் அமராமல் முற்றிலும் தவிர்த்தார். ஏன் அவர் என்னிடம் அப்படிச் செய்தார் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. ஆனால், அதே விசேஷத்தில் அவர் தம்பி சீமானை அருகில் அழைத்து நீண்ட நேரம் மிகவும் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்தார்.
சீமானிடம் பேசியவர், அதன்பிறகு என் பக்கம் கூடத் திரும்பிப் பார்க்காமல் அப்படியே நகர்ந்து போய்விட்டார்!” என்று தனக்கு நடந்த அவமதிப்பைக் கண்ணீர் மல்கக் குமுறியுள்ளார். திருமண விழாவில் வைகோவை ஓரங்கட்டிவிட்டு சீமானுடன் ஸ்டாலின் நெருக்கம் காட்டிய இந்த பகீர் விபரம், தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
