தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் தமிழில் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து எங்கேயும் காதல், ஓகே ஓகே, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, ஆம்பள, அரண்மனை, மான்கராத்தே, பாலு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் ஹன்சிகா

இந்நிலையில் அதிவேக உடல் வளர்ச்சிக்கு ஹன்சிகா ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்டதாக வதந்தி பரவியது. இதற்கு காட்டமாக பதிலளித்துள்ளார் ஹன்சிகா. பிரபலமாக இருப்பவர்களுக்கு இதுவும் ஒரு பகுதிதான். இந்த வதந்தியில் எந்த உண்மையும் இல்லை. இதுநாள் வரை நான் ஊசி போட்டுக்கொண்டதே இல்லை. இதுவரை டாட்டூவையும் நான் போட்டுக்கொண்டதே இல்லை. அதற்கு முக்கியக்காரணம், ஊசி என்றாலே எனக்கு அச்சம் என்று விளக்கமளித்துள்ளார்.