தமிழக அரசியலில் ‘தவெக’ தலைவர் விஜய்யின் வருகை பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக நிர்வாகி சரத்குமார் கொடுத்துள்ள அதிரடி பேட்டி தற்போது அரசியல் களத்தில் தீயாய் பரவி வருகிறது. செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். “விஜய் என்பவர் கொள்கையோ, கோட்பாடோ இல்லாத ஒரு மனிதர். அவரிடம் தெளிவான அரசியல் பார்வை கிடையாது” என்று நேரடியாகவே அட்டாக் செய்துள்ளார் சரத்குமார். இந்த விமர்சனம் தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பேசிய அவர், “வருகிற தேர்தலில் விஜய்யின் தவெக 15 சதவீத வாக்குகளைப் பெறும் என்று உங்கள் கருத்துக்கணிப்புகள் சொன்னாலும் சரி, நிதர்சனமான உண்மை என்னவென்றால், அவர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமாட்டார். ஒரு சீட் கூட அவருக்குக் கிடைக்காது” என்று ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் எதிர்காலத்தைப் பற்றி சரத்குமார் இவ்வளவு வெளிப்படையாக, “முட்டை” (0) சீட் தான் கிடைக்கும் என்று பேசியிருப்பது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.
