கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தனது காரை விதவிதமாக மாற்றி (Modified), பெங்களூரு சாலைகளில் வலம் வந்த காணொளி இணையத்தில் செம வைரலானது. காரின் சைலன்சரில் இருந்து நெருப்புப் பிழம்புகள் வருவது போலவும், காரின் நிறத்தை மாற்றியும், நம்பர் பிளேட்டைச் சிதைத்தும் அவர் செய்த சாகசங்கள் பார்ப்பவர்களை மிரள வைத்தது. ஆனால், இந்த ‘ஹீரோகிாி’ பெங்களூரு போக்குவரத்து போலீசாரிடம் சிக்கியபோதுதான் பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டது.

​போக்குவரத்து விதிகளைத் துவம்சம் செய்ததற்காக அந்த மாணவருக்கு போலீசார் தடாலடியாக ரூ. 1.11 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். “வைரல் ஆகணும்னு ஆசைப்படலாம், ஆனா அதுக்காக இப்படியா?” என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.