மும்பையில் நடைபெற்று வரும் தேர்தலையொட்டி, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது வாக்கினைப் பதிவு செய்ய வாக்குச் சாவடிக்கு வருகை தந்தார். அப்போது அங்கிருந்த இளம் பெண் ஒருவர் அவரை வழிமறித்து, தனது தந்தை பெரும் கடன் சுமையால் அவதிப்பட்டு வருவதாகவும், தங்களுக்கு எப்படியாவது உதவி செய்யுமாறும் கண்ணீர் மல்கக் கேட்டுக்கொண்டார். இதைக் கேட்ட அக்ஷய் குமார், உடனடியாக அந்தப் பெண்ணிடம் தனது குழுவினரைத் தொடர்பு கொள்ளுமாறு கூறி, அவரது அலைபேசி எண்ணைப் பெற்றுக்கொள்ளுமாறு தனது உதவியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
Akshay Kumar was stopped by a girl outside a Mumbai polling booth.
GIRL: "My father is in huge debt, please help"
Akshay immediately asked her to share her number with his team and stopped her from touching his feet ❤️ pic.twitter.com/vkUhIznByf
— News Algebra (@NewsAlgebraIND) January 16, 2026
அந்தப் பெண் நன்றிக்கடனாக அக்ஷய் குமாரின் காலில் விழ முயன்றபோது, அவர் பதறிப்போய் உடனடியாகத் தடுத்து நிறுத்தினார். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் எப்போதும் முன்னணியில் இருக்கும் அக்ஷய் குமார், இக்கட்டான சூழலில் இருந்த அந்தப் பெண்ணுக்கு உடனடியாக உதவ முன்வந்தது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. திரைத்துறையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவர் ஒரு ‘ரியல் ஹீரோ’ என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
